sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனத்தை பாதுகாத்தால் யானைகளை பாதுகாக்கலாம்! உலக யானைகள் தினத்தில் விழிப்புணர்வு

/

வனத்தை பாதுகாத்தால் யானைகளை பாதுகாக்கலாம்! உலக யானைகள் தினத்தில் விழிப்புணர்வு

வனத்தை பாதுகாத்தால் யானைகளை பாதுகாக்கலாம்! உலக யானைகள் தினத்தில் விழிப்புணர்வு

வனத்தை பாதுகாத்தால் யானைகளை பாதுகாக்கலாம்! உலக யானைகள் தினத்தில் விழிப்புணர்வு


ADDED : ஆக 13, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 13, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நீலகிரி வரையாடுகள் திட்டம் சார்பில், உலக யானைகள் தினம் கொண்டாட்டம் நடந்தது.

நீலகிரி வரையாடுகள் திட்டம் உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமை வகித்து, காடுகள் எவ்வாறு உருவாகிறது; அவற்றை பாதுகாப்பதில் நமது பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார்.

அவர் பேசுகையில், ''ஒரு நாளுக்கு யானைகள், 20 - 25 கி.மீ., துாரம் நடந்தால் தான் அதற்கு தேவையான உணவுகள் கிடைக்கும். அவ்வாறு நடக்கும் போது, கால்களில் கண்ணாடி பாட்டில்கள் குத்தினால், சீழ் பிடித்து உடல்நிலை பாதித்து இறக்க வாய்ப்பு உள்ளது. மேலும், வனத்தில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்ளும் போது, உயிருக்கு ஆபத்து நேரிடும்.

எனவே, வனப்பகுதியில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் போன்றவை வீசக்கூடாது. வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். அதை உணர்ந்து செயல்பட வேண்டும். வனம் காத்தால் தான் வளமாக இருக்க முடியும் என்பதை உறுதியாக ஏற்க வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, ஆழியாறு சோதனைச்சாவடியிலும், நீலகிரி வரையாடுகள் திட்டம் உதவி இயக்குனர், சுற்றுலா பயணியரிடம் வனம் பாதுகாப்பு, யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது உள்ளிட்டவை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதில், பொள்ளாச்சி வனத்துறையினர் பங்கேற்றனர்.

* கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. வனங்களின் பாதுகாவலனான யானைகளை பாதுகாப்பது மாணவர்களாகிய நமது கடமையாகும்.

வருங்கால இந்தியாவின் துாண்களாகிய நாங்கள் எந்த சூழ்நிலையிலும் யானைகளின் இருப்பிடமான வனங்களை சேதப்படுத்த மாட்டோம் என்றும், சேதப்படுத்துபவர்களை வன்மையாக கண்டிப்போம். யானைகளின் இருப்பிடத்தை காப்பது எங்களது தலையாய கடமை என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, மாணவர்கள் யானைகள் உருவ பொம்மை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

உடுமலை


உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் விழிப்பணர்வு முகாம் நடந்தது. உடுமலை வனச்சரகம் திருமூர்த்திமலைப்பகுதியில், மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு, யானைகள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கோவை, நீலகிரி வரையாடு திட்டம் உதவி இயக்குனர் தலைமை வகித்தார். உடுமலை வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, வனத்தை காப்பதன் அவசியம், வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனத்தை கட்டமைப்பதில் யானைகளின் பங்கு குறித்தும், யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் தினமும், அதிக துாரம் நடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே, வனப்பகுதிகளில் கண்ணாடி துகள்கள், துணிகள், கயிறுகள் வீசி எறிவதால், கண்ணாடி துண்டுகள் யானைகளின் பாதத்தில் உள்ள வெடிப்பு போன்ற அமைப்புகளில் பாதிப்புகள் ஏற்படுத்தி, நடக்க முடியாமல் யானைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

அதே போல், தேவையற்ற பொருட்களை வனத்திற்குள் வீசுவதால், வன விலங்குகள் பாதிக்கப்படுகிறது உள்ளிட்டவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us