/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி சுவரில் விளம்பரங்கள் மாற்றி யோசித்தால் விமோசனம்
/
பள்ளி சுவரில் விளம்பரங்கள் மாற்றி யோசித்தால் விமோசனம்
பள்ளி சுவரில் விளம்பரங்கள் மாற்றி யோசித்தால் விமோசனம்
பள்ளி சுவரில் விளம்பரங்கள் மாற்றி யோசித்தால் விமோசனம்
ADDED : ஜூலை 13, 2024 01:30 AM
பொள்ளாச்சி:அரசு பள்ளி சுவர்களில் மாணவ, மாணவியரை மகிழ்ந்து, கற்க துாண்டும் வகையில், பாடங்களை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைய வேண்டும்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இருந்தாலும், பள்ளிச் சுவர்களில் அரசியல், சினிமா, வணிக நிறுவன சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால், முகம் சுளிக்க வைக்கின்றன.
ஒரு சில பள்ளிகளில் மட்டுமே வளாகத்தை சுத்தப்படுத்தி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில், பாடங்களை சித்தரிக்கும் ஓவியங்கள் சுவரில் வரைந்து, பள்ளிகளின் சுற்றுச்சுவர்களை அலங்கரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'மாணவ, மாணவியர் மகிழ்ந்து கற்கும் வகையிலும், பள்ளி வளாக சுவர்களில், பாடங்களைச் சித்தரிக்கும் பல வண்ண ஓவியங்கள் வரைய வேண்டும். குறிப்பாக, நல்ல பழக்க வழக்கங்கள், பாரம்பரியக் கலைகள், உடலின் பாகங்கள், ஆங்கில இலக்கணம் ஆகியவை குறித்த ஓவியங்கள் இடம்பெற வேண்டும்.
இதன் வாயிலாக, பள்ளி சுற்றுச் சுவரில் அத்துமீறி ஒட்டப்படும் மற்றும் வரையப்படும் விளம்பரங்களுக்கு கடிவாளம் போட முடியும்,' என்றனர்.

