/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடி தோட்டத்தில் காய்கறிகள் பூச்சி தாக்குதலில் தப்புவது எப்படி!
/
மாடி தோட்டத்தில் காய்கறிகள் பூச்சி தாக்குதலில் தப்புவது எப்படி!
மாடி தோட்டத்தில் காய்கறிகள் பூச்சி தாக்குதலில் தப்புவது எப்படி!
மாடி தோட்டத்தில் காய்கறிகள் பூச்சி தாக்குதலில் தப்புவது எப்படி!
ADDED : ஏப் 29, 2024 12:55 AM

மேட்டுப்பாளையம்;மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகளை பூச்சி தாக்குதல்களில் இருந்து கட்டுப்படுத்த, பூச்சி விரட்டிகளை வீட்டிலேயே தயாரித்து கட்டுப்படுத்தலாம் என, வேளாண் மாணவியர் தெரிவித்தனர்.
பொள்ளாச்ச்சி வாணவராயர் வேளாண்மை கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில், விவசாயிகளை சந்தித்தனர்.
வீட்டு மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் தக்காளி, கத்திரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, 3ஜி கரைசல், அக்னி அஸ்திரம் ஆகிய பூச்சி விரட்டிகளை, வீட்டிலேயே எப்படி தயாரிப்பது, பயன்படுத்துவது போன்றவற்றை செயல் விளக்கம் செய்து விளக்கினர்.
மாணவியர் கூறுகையில், 'இந்த பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதால் காய்ப்புழு, தண்டு துளைப்பான் மாவுப்பூச்சி, அஸ்வினி பூச்சி போன்ற பூச்சிகள் செடிகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்' என்றனர்.
மேலும், வாழையில் மதிப்புக் கூட்டுதலின் வாயிலாக, அதிக லாபம் பெறலாம் என, விவசாயிகளிடம் தெரிவித்தனர்.---

