/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பார்வைக்கு வழிகாட்டி பதிவேடு; ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

ADDED : ஜூன் 13, 2024 07:38 AM
கோவை: வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அவற்றை பார்த்து 15 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவை மாவட்டத்தில் உள்ள, வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரித்து, மக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் விபரங்கள், www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது, ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், 'மாவட்ட கலெக்டர்/ தலைவர், மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்டம்' என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திடலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.