/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி; தம்பதி மீது வழக்கு பதிவு
/
ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி; தம்பதி மீது வழக்கு பதிவு
ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி; தம்பதி மீது வழக்கு பதிவு
ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி; தம்பதி மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 10, 2024 12:55 AM
கோவை;நகை செய்து தருவதாக, ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பெற்று, மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி, 48; நகைப்பட்டறை உரிமையாளர்.
இவர் கோவை ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி கனகலட்சுமியிடம் தங்க கட்டிகளை கொடுத்து, நகைகளாக வடிவமைத்து விற்பனை செய்து வந்தார்.
2022ம் ஆண்டு மாயாண்டி, ஒரு கிலோ தங்கத்தை ஆரம், ஜிமிக்கி, செயின் உள்ளிட்ட ஆபரணங்களாக வடிவமைத்து தரும்படி கொடுத்தார்.
தங்கத்தை பெற்றுக் கொண்ட இருவரும், 25 நாட்களில் ஆபரணமாக செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், ரூ.21 லட்சம் மதிப்பிலான, 350 கிராம் தங்க நகைகளை மட்டுமே திருப்பிக் கொடுத்தனர்.
மீதமுள்ள ரூ.40 லட்சம் மதிப்பிலான, 650 கிராம் தங்கத்தை கொடுக்காமல், காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாயாண்டி தனது சகோதரருடன் சென்று பணம் அல்லது நகையாக திருப்பி கொடுக்கும்படி கேட்டனர். சிவக்குமார், கனகலட்சுமி பணம், நகையை கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தனர்.
மாயாண்டி புகாரின் பேரில், கடைவீதி போலீசார் மிரட்டல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் சிவக்குமார், கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

