/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் முழு உடல்நல பரிசோதனை முகாம்
/
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் முழு உடல்நல பரிசோதனை முகாம்
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் முழு உடல்நல பரிசோதனை முகாம்
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் முழு உடல்நல பரிசோதனை முகாம்
ADDED : ஏப் 04, 2024 10:40 PM
கோவில்பாளையத்தில் உள்ள, கே.எம்.சி.எச்.,ல் ஏப்ரல் 1ல் துவங்கிய, முழு உடல்நல பரிசோதனை முகாம், வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
நோய் வந்த பின், சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, நோய் வரும் முன் காத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதன் வாயிலாக, பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் இதற்கான முகாம் நடக்கிறது. கோவில்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடக்கும் இம்முகாமில், கே.எம்.சி.எச்.,ன் பல்வேறு மருத்துவ துறைகள் பங்கேற்கின்றன.
கடந்த 1ம் தேதி துவங்கிய முகாம், வரும் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் நடக்கிறது.
முகாமில், உடல் நலப்பரிசோதனை, சிறுநீர், ரத்த அணுக்கள், தட்டையணு, உணவுக்கு முன் மற்றும் பின் சர்க்கரை அளவு, சீரம் கிரியாடினின், ரத்த யூரியா, லிபிட் ப்ரொபைல், கல்லீரல், ஈ.சி.ஜி., எக்கோ அல்லது டி.எம்.டி., அடிவயிறு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், காது- மூக்கு -தொண்டை, தைராய்டு பரிசோதனைகளுடன், பொதுமருத்துவ ஆலோசனை, உணவு கட்டுப்பாடு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
முகாமில் பங்கேற்போருக்கு, 20 சதவீத சிறப்பு சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும், 87541 87551, 73393 33485 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

