/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து நான்கு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
/
நகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து நான்கு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து நான்கு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சியில் முறைகேடுகளை கண்டித்து நான்கு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 23, 2025 11:55 PM

வால்பாறை,; நகராட்சியில் நடைபெறும் ஊழலைக்கண்டித்து, தி.மு.க., அ,தி,மு,க., உள்ளிட்ட நான்கு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 19 பேர் தி.மு.க.,வைச்சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், நகராட்சியில் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்வதில், கடந்த சில மாதங்களாகவே தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், மகுடீஸ்வரன் (தி.மு.க.,) மணிகண்டன் (அ.தி.மு.க.,) வீரமணி (வி.சி.,) ஆகிய நான்கு கவுன்சிலர்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
'வால்பாறை நகராட்சியில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்யாமல், செய்யப்பட்டதாக கூறி மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுகளிலும் வளர்ச்சிப்பணிகள் பாரபட்சமின்றி நடக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நான்கு வார்டுகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

