/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல் சுற்று சிறப்பு ; 2வது சுற்றுக்கு 'ஆப்பு'
/
முதல் சுற்று சிறப்பு ; 2வது சுற்றுக்கு 'ஆப்பு'
ADDED : ஏப் 03, 2024 10:58 PM
திருப்பூர் லோக்சபா தொகுதியில், பூத் கமிட்டியினருக்கு இந்த தேர்தலில் நான்கு முறை பூத் செலவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் என தி.மு.க., கூட்டணியினருக்கு தெரிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் பணிமனை திறப்புக்கு முன்தினமே பூத் கமிட்டிக்கு செலவு தொகை பட்டுவாடா நடந்துள்ளது. இதில் பகுதி நிர்வாகிகளுக்கு தலா ஒரு லட்சம், கிளை நிர்வாகிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் என பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சியினர் குஷியாக பணிகளை துவங்கினர்.
இந்நிலையில், பல்லடத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மதுக்கடை பார் உரிமையாளர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டாவது கட்ட பட்டுவாடாவுக்காக, மதுக்கூட 'பார்'களில் கலெக் ஷன் செய்த தொகை அப்படியே வருமான வரித்துறையின் கைகளில் மாட்டி கொண்டது. இதனால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. எதிர்பாராத பிரச்னையால், இரண்டாவது கட்ட பட்டுவாடாவில் சிக்கல் வந்து விடுமோ என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் எழுந்தது.
'பறிமுதல் செய்த பணத்தை பற்றி எதற்கு கவலை? பூத் கமிட்டிக்கு உண்டான தொகை அதற்குரிய நேரத்தில் வந்து சேரும். அதனை ஏற்பாடு செய்வது எங்கள் வேலை. நீங்கள் எல்லாரும் தேர்தல் வேலைகளைப் பாருங்கள்,' என்று தொண்டர்களுக்கு சீனியர் நிர்வாகிகள் தைரியம் சொல்கின்றனர்.

