/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் முதல் 'டயாலிசிஸ்' மையம்
/
ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் முதல் 'டயாலிசிஸ்' மையம்
ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் முதல் 'டயாலிசிஸ்' மையம்
ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் முதல் 'டயாலிசிஸ்' மையம்
ADDED : ஏப் 04, 2024 05:53 AM
கோவை : சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான புதிதாக டயாலிசிஸ் பிரிவு, லோக்சபா தேர்தலுக்கு பிறகு துவங்கப்படவுள்ளது.
சிறுநீரக பாதிப்பால், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று தினமும் ஏராளமானோர் 'டயாலிசிஸ்' செய்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு, தனியார் மருத்துவமனைக்கு சென்று செலவு செய்யும் வசதி இல்லை.
எனவே, அரசு மருத்துவமனையையே எதிர்பார்த்துள்ளனர். நோயாளிகள் பயன்பெற ஏதுவாக சென்னை மாநகராட்சியில், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு 'டயாலிசிஸ்' மையம் திறக்கும் நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் அரசு மட்டுமின்றி, ஆர்வமுள்ள தன்னார்வ நிறுவனங்கள், ரோட்டரிகள் பல கோடி ரூபாய் செலவில் டயாலிசிஸ் இயந்திரங்கள், துணை உபகரணங்களை, படுக்கை வசதிகளுடன் செய்து தருகின்றன.
ஒரு நோயாளிக்கு மாதம் எட்டு முறை, டயாலிசிஸ் செய்யும் வகையில் அங்கு வசதிகள் உள்ளன.
ஆனால், கோவையில் மாநகராட்சி வசம் இதுவரை, ஒரு 'டயாலிசிஸ்' மையம்கூட இல்லை. இதையடுத்து, முதற்கட்டமாக ஒரு மையத்தை நிறுவ, மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக டயாலிசிஸ் பிரிவு துவங்கப்படவுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், புதிய டயாலிசிஸ் பிரிவு துவங்கும் பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், முதலில் ஒரு மையம் துவங்கப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் உதவியுடன் படிப்படியாக, மையங்களை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

