/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம் காரணம்': பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 20, 2024 01:08 AM

ஊட்டி;''நீலகிரி தொகுதியில் வாக்காளர்கள் விடுபட்டதற்கு மாநில அரசின் தோல்வி பயம் காரணம்,' என, பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நேற்று இரவு, ஊட்டி ஹோபார்ட் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடி மையத்தை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி லோக்சபா தொகுதியில் சில ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர் களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
வாக்காளர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மாநில அரசு தோல்வி பயத்தால் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு அரசு தான் காரணம். ஆரம்பத்திலிருந்தே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என கூறி வருகிறோம்.
ஆனால், அது நடக்கவில்லை,'' என்றார்.