/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு
/
நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு
நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு
நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு
ADDED : ஏப் 21, 2024 11:06 PM
பொள்ளாச்சி:தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு துவங்கியது.
அதில், தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட இருந்த நிலையில், 4 முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, இன்று, அறிவியல், நாளை சமூக அறிவியல் தேர்வும் நடத்தப்படுகிறது. அதனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வு முடிந்து, 24ம் தேதி முதல், 4 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அதேநேரம், ஆசிரியர்களுக்கு வரும், 26ம் தேதி வரை பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்து மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி விபரங்களை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்வர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.