/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த திராவிட கட்சிகள்
/
கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த திராவிட கட்சிகள்
ADDED : ஏப் 14, 2024 10:47 PM
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் - பகுஜன் சமாஜ் கட்சி - புதிய தலைமுறை மக்கள் கட்சி மற்றும் சுயேட்சகைள் என, 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. திராவிட கட்சிகளுக்கு நிகராக, பா.ஜ., தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழல்கிறது.இதை சற்றும் எதிர்பாராத திராவிட கட்சிகள், தங்களது களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இறுதி கட்ட அஸ்திரமாக, வாக்காளர்களை, 'கவனிப்பு' செய்யும் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை சார்ந்தவர்கள், மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், நடுநிலையானவர்கள் எத்தனை பேர் என, சர்வே நடத்தி பட்டியல் தயாரித்துள்ளனர்.
ஒரு சில இடங்களில், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்க போகிறீர்கள் என, சிலர் கேட்டு திராவிட கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும், நான்கு நாட்களே உள்ளதால், கடைசி கட்ட அஸ்திரமாக பணப்பட்டுவாடாவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

