/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'
/
ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'
ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'
ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'
ADDED : ஏப் 19, 2024 11:25 PM
திருப்பூர்;திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்டது. இங்குள்ள ஓட்டுச்சாவடி அருகே தி.மு.க.,வினர் 'பூத்'தில் கட்சியினர் சிலர் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி பாக்கெட்டில் வைப்பது; ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்'புடன் சேர்த்து பண பட்டுவாடா செய்வது போன்ற 'வீடியோ ' வெளியானது.
திருமுருகன்பூண்டி போலீசார் அங்கு செல்வதற்குள், பண பட்டுவாடா செய்து வந்த சிலர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், திருமுருகன்பூண்டி, தி.மு.க., 19வது வார்டு செயலாளர் லோகநாதன், 46 என்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.