/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயில் கருகிய தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
/
தீயில் கருகிய தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
தீயில் கருகிய தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
தீயில் கருகிய தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 21, 2024 09:50 PM
சூலுார்;தீயில் கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் அடுத்த அத்தப்ப கவுண்டன் புதுார் ராவத்துார் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கடந்த, சில நாட்களுக்கு முன் தீப்பிடித்தது. தீ மளமள என பரவி, தென்னை மரங்களில் பற்றியது. 15க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகின.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ரோட்டை ஒட்டி தென்னந்தோப்பு உள்ளது. ரோட்டில் செல்வோர், பீடி, சிகரெட்டை பிடித்து விட்டு, அணைக்காமல் வீசி செல்வதால், தீப்பற்றி தென்னை மரங்கள் நாசமாகின்றன. தீயில் கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.