sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி வரத்து குறைவு விலையிலும் மாற்றம்

/

காய்கறி வரத்து குறைவு விலையிலும் மாற்றம்

காய்கறி வரத்து குறைவு விலையிலும் மாற்றம்

காய்கறி வரத்து குறைவு விலையிலும் மாற்றம்


ADDED : ஜூன் 03, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூன் 03, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, காய்கறிகளின் வரத்து குறைவாகவும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், காய்கறிகள் வரத்து குறைந்த அளவே இருந்தது. இதனால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறிகள் விலை நிலவரம் குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 370 ரூபாய், தேங்காய் (ஒன்று) - 16, கத்தரிக்காய் கிலோ -- 40, முருங்கைகாய் -- 35, வெண்டைக்காய் - 50, முள்ளங்கி - 40, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 18, பாகற்காய் - 55, புடலை - 40, சுரைக்காய் - 25, பீர்க்கங்காய் - 50, பீட்ரூட் - 20, அவரைக்காய் -- 65, பச்சை மிளகாய் - 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரத்தை விட, தற்போது காய்களின் விலை மாறுபட்டுள்ளது. இதில், தக்காளி (15 கிலோ) - 70, பச்சை மிளகாய் மற்றும் முள்ளங்கி கிலோ - 20, கத்தரிக்காய் - 15, முருங்கைக்காய் - 10 போன்ற காய்களின் விலை அதிகரித்துள்ளது.

பாகற்காய் - 15, சுரைக்காய் - 10, பீர்க்கங்காய் - 20, பீட்ரூட் மற்றும் அவரைக்காய் விலை -5 ரூபாய் சரிந்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் பரவலாக மழைப்பொழிவு இருந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து காய்கறிகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us