/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.டி., கல்லுாரியில் ஜூன் 1ல் 'ரோபோ தயாரிக்கலாம் வாங்க'
/
சி.ஐ.டி., கல்லுாரியில் ஜூன் 1ல் 'ரோபோ தயாரிக்கலாம் வாங்க'
சி.ஐ.டி., கல்லுாரியில் ஜூன் 1ல் 'ரோபோ தயாரிக்கலாம் வாங்க'
சி.ஐ.டி., கல்லுாரியில் ஜூன் 1ல் 'ரோபோ தயாரிக்கலாம் வாங்க'
ADDED : மே 23, 2024 04:40 AM
கோவை: கணிதவாணி கணித அறிவியல் கழகம் மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கணிதம், அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்ய, களம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வரும், ஜூன் 1ம் தேதி, 'ரோபோ செய்யலாம் வாங்க' என்ற தலைப்பில், சி.ஐ.டி., கல்லுாரியில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வயது வரம்பு இல்லை. கண்டுபிடிப்புகள் தெளிவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தும் நிகழ்வுடன், சிறிய வகை ரோபோ தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கட்டணம் ஏதும் இல்லை எனினும், முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என, சி.ஐ.டி., கணிதவியல் துறை பேராசிரியர் பிரபாகரன் தெரிவித்தார்.
நிகழ்வு குறித்த விபரங்களை, 97896 52826 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, அறிந்து கொள்ளலாம்.