/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நுாறு கோடி ரூபாய் ஊழல்' பா.ஜ.,வேட்பாளர் குற்றச்சாட்டு
/
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நுாறு கோடி ரூபாய் ஊழல்' பா.ஜ.,வேட்பாளர் குற்றச்சாட்டு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நுாறு கோடி ரூபாய் ஊழல்' பா.ஜ.,வேட்பாளர் குற்றச்சாட்டு
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நுாறு கோடி ரூபாய் ஊழல்' பா.ஜ.,வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 14, 2024 01:13 AM

போத்தனூர்;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன், நேற்று போத்தனூர் கடைவீதியில் தனது பிரசாரத்தை துவக்கினார்.
அங்கிருந்து கருப்பராயன் கோவில், ஜி.கே. ஸ்கொயர், முருகன் நகர், முத்தையா நகர், சுந்தராபுரம், மாச்சம்பாளையம், நாகராஜபுரம், பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
சுந்தராபுரம் சங்கம் வீதியில் அவர் பேசியதாவது:
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கழிவு பிரச்னையால், மக்கள் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய சுற்றுச்சூழல், சட்டத்துறை அமைச்சர்களிடம் மனு கொடுத்தேன். குழு அமைத்து பிரச்னை குறித்த அறிக்கை தர, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கண்டிப்பாக இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, மாசுபட்ட நிலத்தடி நீர் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வரிப்பணத்தில், ரூ.40 கோடிக்கும் மேல் செலவு செய்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணி, மீண்டும் துவக்கி கட்டி முடிக்கப்படும்.
மத்திய அரசு திட்டங்களின் பலன்கள், மக்களை முழுமையாக சென்றடைய செய்வேன். போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த, ரூ.28 கோடியில் பணி நடக்கிறது. இத்தொகை நூறு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பணி விரைவில் நிறைவடையும்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஆகவே, மாற்றத்தை சிந்தித்து, ஏற்றம் பெற தாமரைக்கு ஓட்டு போடுங்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை பார்க்கலாம். ஊழலற்ற, நேர்மையான, நல்லாட்சி மீண்டும் தொடர, பா.ஜ.,வை மறவாதீர். இவ்வாறு, அவர் பேசினார்.
சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., தலைவர் முகுந்தன், பொது செயலாளர் கமல் பாலன், பொருளாளர் கமலகண்ணன். ஆன்மிக அணி மண்டல் தலைவர் பொன்னுசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

