/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்ரகாளியம்மன், கருப்பராயர் குரு சக்திநாதர் கோவில் குண்டம்
/
பத்ரகாளியம்மன், கருப்பராயர் குரு சக்திநாதர் கோவில் குண்டம்
பத்ரகாளியம்மன், கருப்பராயர் குரு சக்திநாதர் கோவில் குண்டம்
பத்ரகாளியம்மன், கருப்பராயர் குரு சக்திநாதர் கோவில் குண்டம்
ADDED : ஏப் 30, 2024 12:33 AM

போத்தனூர்;கோவைபுதூரிலுள்ள பத்ரகாளியம்மன், கருப்பராயர், குருசக்திநாதர் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
கோவைபுதூர், என் பிளாக்கிலுள்ள கோவிலின், 15ம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா கடந்த, 22ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்த கன்னி பூஜை, கோ பூஜை, நாக பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா, கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தன.
நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமும் தொடர்ந்து கோவிலிலிருந்து அம்மன் புறப்பாடு, பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தன.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலுக்காக பூ வளர்த்தல் நடந்தது. மாலை சக்தி கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதையடுத்து குருசாமி முதலில் குண்டத்தில் இறங்கினார். பின், சக்தி கரகங்கள், காவடி எடுத்தோர், ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கினர்.
நேற்று காலை மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல், உச்சி பூஜை, கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல், மாலை மாவிளக்கு வழிபாடு, மஞ்சள் நீராட்டு நடந்தன.
பின் கரகம் கரைத்தல், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெற்றது.

