ADDED : ஏப் 24, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை ராமசாமி நகர் பகிர்மான மின்நுகர்வோருக்கு, மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியம், உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், காந்திநகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ராமசாமி நகர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால், ஏப்., 2024 மின் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே, ராமசாமி நகர் பகிர்மான மின் நுகர்வோர்கள், பிப்., 2024 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, ஏப்., மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

