/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரியநாயக்கன்பாளையம் அருகே வேட்பாளரை கலங்கடித்த யானை
/
பெரியநாயக்கன்பாளையம் அருகே வேட்பாளரை கலங்கடித்த யானை
பெரியநாயக்கன்பாளையம் அருகே வேட்பாளரை கலங்கடித்த யானை
பெரியநாயக்கன்பாளையம் அருகே வேட்பாளரை கலங்கடித்த யானை
ADDED : ஏப் 09, 2024 11:24 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரோட்டில், அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாகனத்தை, காட்டு யானை கடந்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி, பாலமலை வட்டாரத்தில் பெரும்பதி, பெருக்கை பதி, குஜ்ஜூர்பதி, பெருக்கைப்பதி புதூர், மாங்குழி உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஓட்டு சேகரிக்க, நேற்று முன்தினம் காலை, 6.30 மணிக்கு கோவை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், சிங்கை ராமச்சந்திரன் மற்றும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், கார்களில் சென்றனர்.
பாலமலை ரோட்டில், வனத்துறையின் சோதனை சாவடியில் இருந்து, 50 மீட்டர் தொலைவில் மலைப்பாதை துவங்கும் இடத்தில், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று, ரோட்டை கடந்து காட்டுக்குள் சென்றது. யானையைக் கண்டதும், அ.தி.மு.க.,வினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் வருகையையொட்டி பாலமலை ரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

