/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை
/
பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை
ADDED : மார் 28, 2024 05:38 AM
உடுமலை, : அரசுப்பள்ளிகளில், மூன்றாம் பருவத்தேர்வுகளுக்கு தயாராக இருப்பதற்கு கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டுபதிவு, தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கான தேர்வுகளை முன்பாக நடத்தி, விடுமுறை விடுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலை பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. உயர்நிலை பொதுத்தேர்வு நடக்கிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தேர்வு நடத்துவது குறித்து உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஏப்., 2ம்தேதி மூன்றாம் பருவத்தேர்வு துவங்குகிறது. தேர்வுகள், ஏப்., 12ம்தேதி முதல் நிறைவடைகிறது.
தேர்வுக்கான அட்டவணைகளை பின்பற்றவும், 6, 7, 8 வகுப்புகளுக்கு வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தற்போது அனைத்துப்பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தான் நடக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

