/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகா போட்டியில் அசத்தும் பள்ளி மாணவி
/
யோகா போட்டியில் அசத்தும் பள்ளி மாணவி
ADDED : ஜூலை 29, 2024 10:26 PM

கோவை:யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார் பள்ளி மாணவி கனிகா.
நாமக்கல் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கனிகா, 13. மாணவிக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு, இசை, நடனம் உள்ளிட்டவைகள் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியில் நடக்கும் இசை, நடனம் மட்டுமின்றி யோகா, தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். பள்ளி அளவில் நடந்த யோகா போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம், சக்தி சர்வதேச பள்ளி சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க தேர்வாகி, போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார்.
சிறு வயதிலேயே பல்வேறு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று, பதக்கங்கள் வென்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.

