/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கிலோவுக்கு ரூ.3 விலை உயர்வு
/
கொப்பரை கிலோவுக்கு ரூ.3 விலை உயர்வு
ADDED : ஏப் 03, 2024 01:26 AM

ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் ஆனைமலையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 375 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 84.01 ரூபாய் முதல், 93.01 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 516 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 60.26 முதல், 78.65 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 891 கொப்பரை மூட்டைகளை, 94 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 11 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்தை விட, 147 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கிலோவுக்கு, 3.05 ரூபாய் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்த வாரம், 30.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 40.986 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

