/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்
/
பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்
பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்
பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்
ADDED : ஏப் 20, 2024 12:49 AM

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி அருகே, 104 வயது முதியவர் தனது பேரன், பேத்திகளுடன் வந்து ஓட்டளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட, ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி, 104; விவசாயி.
நேற்று மதியம் தனது மகன், பேரன், பேத்திகளுடன் ஓட்டுசாவடிக்கு வந்து ஓட்டுப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தார்.
அவர் கூறுகையில், எனக்கு, 104 வயதாகிறது. 21 வயதில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளித்து வருகிறேன். எங்கிருந்தாலும் ஊருக்கு புறப்பட்டு வந்து, தவறாமல் ஓட்டளிப்பேன். அனைவரும் ஓட்டளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லது, என்றார்.
'நான் ஒருத்தன் ஓட்டளித்தாலும், ஓட்டளிக்காமல் இருந்தாலும், என்ன மாற்றம் வந்து விட போகிறது' என, தேர்தலன்று வீட்டில் முடங்கி கிடப்பவர்கள், இவரை பார்த்து அடுத்த தேர்தலிலாவது திருந்தட்டும்!

