/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி தொகுதி தேர்தல் களத்தில் 15 பேர்
/
பொள்ளாச்சி தொகுதி தேர்தல் களத்தில் 15 பேர்
ADDED : மார் 30, 2024 11:56 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தொகுதியில், மூன்று பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், 15 பேர் களத்தில் உள்ளனர். நேற்று மாலை, சின்னம் ஒதுக்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட, 29 பேர், 44 வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அதில், 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது; 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளான நேற்று, மூன்று பேர் வாபஸ் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர், ஆறு பேர், ஒன்பது சுயே., உள்பட, 15 பேர் களத்தில் உள்ளனர்.
தி.மு.க., - ஈஸ்வரசாமி (உதயசூரியன்), அ.தி.மு.க., - கார்த்திகேயன் (இரட்டை இலை), பகுஜன் சமாஜ் கட்சி - பென்ஜமின் கிருபாகரன் (யானை), பா.ஜ., - வசந்தராஜன் (தாமரை), புதிய தலைமுறை மக்கள் கட்சி - கோபாலகிருஷ்ணன் (பானை), நாம் தமிழர் கட்சி - சுரேஷ்குமார் (மைக்) ஆகியோருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
சுயேட்சைகள்
ஈஸ்வரசாமி (பேனா முனை மற்றும் ஏழு கதிர்கள்), கார்த்திகேயன் (மின்கம்பம்), தா.கார்த்திகேயன் (தென்னை மரங்கள்), ப.கார்த்திகேயன் (இடுக்கி), காளிமுத்து (பேட்), நுார்முகமது (ெஹல்மெட்), பிரகாஷ் (விவசாயி), ராமசாமி (டயமன்ட்), வசந்தகுமார் (பலுான்) ஆகியோருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

