/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஏப் 25, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம் நடந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமை வகித்தார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் எந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம், கல்லுாரியை தேர்வு செய்வது, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துவது, வங்கி கடன், கல்வி உதவித்தொகைகள் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

