/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறி செய்த வாலிபர் 6 மணி நேரத்தில் கைது
/
வழிப்பறி செய்த வாலிபர் 6 மணி நேரத்தில் கைது
ADDED : ஜூலை 25, 2025 12:16 AM

சென்னை :மூதாட்டியிடம், 6 கிராம் கம்மலை பறித்துச் சென்றவரை, ஆறு மணி நேரத்தில் பிடித்து, நொளம்பூர் போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி, 72. நேற்று முன்தினம் காலை 6:15 மணிக்கு, கடையில் பால் வாங்கி, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர், திரிபுரசுந்தரி காதில் அணிந்திருந்த, 6 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டிக்கு, மருத்துவமனையில் காதில் மூன்று தையல்கள் போடப்பட்டன.
சம்பவம் குறித்து, மூதாட்டியின் பேரன் கவுசிகன், 25, காலை 10:00 மணிக்கு நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்தனர்.
இதை வைத்து, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஆசிப் பாஷா, 29, என்பவர் மூதாட்டியிடம் கம்மலை பறித்தது தெரிந்தது. மதியம், 12:00 மணிக்கு, அவர் வீட்டில் இருந்த ஆசிப் பாஷாவை, போலீசார் கைது செய்து, கம்மலை பறிமுதல் செய்தனர்.
சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து நகையை மீட்டு கொடுத்த நொளம்பூர் போலீசாரை, கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.

