/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
/
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
ADDED : செப் 07, 2025 08:44 AM

சென்னை : ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு, சென்னை ஓ.டி.ஏ.,வில் நேற்று நடந்தது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ராணுவ அகாடமியில், நான்கு நாள் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, சென்னை பரங்கிமலையில் உள்ள ஓ.டி.ஏ., எனும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
தலைமை பண்பு, தேசத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகள், இளம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அதன்படி, 11 மாதங்களாக நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், 34 மகளிர் பிரிவு அதிகாரிகள் உட்பட, 155 அதிகாரிகள், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்ச்சி பெற்ற ராணுவ அதிகாரி களின் அணி வகுப்பை ஏற்றார்.
நட்பு ரீதியாக மாலத்தீவு, உகாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட ராஜ் பிஸ்வாஸுக்கு வெள்ளி பதக்கம், பாரூல் தட்வாலுக்கு தங்க பதக்கம், பிரஞ்சல் திக் ஷத்துக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டன.
பின், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்ச்சி பெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.
நட்பு ரீதியாக, உகாண்டா, ஜிம்பாவே, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.