/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிமனை மேம்பாட்டு பணி 4 விரைவு ரயில்கள் ரத்து
/
பணிமனை மேம்பாட்டு பணி 4 விரைவு ரயில்கள் ரத்து
ADDED : பிப் 07, 2025 12:45 AM
சென்னை, சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து, கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் நான்கு ரயில்களின் சேவை, ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் உள்ள ரயில்வே பணிமனையில், மேம்பாட்டு பணி நடக்கிறது. எனவே, சில விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. யஸ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல், இரவு 10:45 மணி விரைவு ரயில், யஸ்வந்த்பூர் - புதுச்சேரி இரவு 10:45 மணி ரயில் ஆகியவை ஏப்., 4ம் தேதி; சென்ட்ரல்- யஸ்வந்த்பூர் இரவு 11:30 மணி ரயில், புதுச்சேரி -யஸ்வந்த்பூர் இரவு 10:30 மணி ரயில் ஆகியவை, ஏப்., 5ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

