/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
/
40 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
40 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
40 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
ADDED : அக் 27, 2024 08:43 PM
சென்னை:தீபாவளி பண்டிகைக்காக, சென்னை விமான நிலையம், நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யும் பணியை, தனியார் நிறுவனத்திடம் விமான நிலைய நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இப்பணி நடந்து வருகிறது.
டெர்மினல் - 2, சென்னை சர்வதேச விமான முனையத்தின் இரண்டாவது தளத்தின் மேல்பகுதியில், வண்ண விளக்குகளை தொங்கவிடும் பணியில், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம், 26, நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, நிலை தடுமாறி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த, படுகாயம் அடைந்தார். பாதுகாப்பு கவசம் ஏதும் அணியாததால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

