/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
/
போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : நவ 26, 2025 03:15 AM
சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நேற்று காலை தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த போலீசார், அவரை தடுத்து மீட்டனர். விசாரணையில், பட்டாளத்தைச் சேர்ந்த ஷகிலா, 51 என்பது தெரிய வந்தது.
மேலும், இவரது கணவர் அப்துல் லத்தீப் என்பவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவசரமாக, 15 லட்சம் ரூபாய் வேண்டும் எனக்கூறியதால், மருமகனிடம் 11 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுக் கொடுத்தேன்.
ஆனால், அவர் தன்னிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தன் வாழ்க்கை மட்டுமின்றி, மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுத்து, 11 லட்சம் ரூபாயை பெற்று தர வேண்டும் என, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. அவரிடம் வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

