/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாய் கண்முன் சிறுவனை கடத்த முயற்சி வண்ணாரப்பேட்டை போதை ஆசாமி கைது
/
தாய் கண்முன் சிறுவனை கடத்த முயற்சி வண்ணாரப்பேட்டை போதை ஆசாமி கைது
தாய் கண்முன் சிறுவனை கடத்த முயற்சி வண்ணாரப்பேட்டை போதை ஆசாமி கைது
தாய் கண்முன் சிறுவனை கடத்த முயற்சி வண்ணாரப்பேட்டை போதை ஆசாமி கைது
ADDED : செப் 03, 2025 12:39 AM

காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டையில், பள்ளியில் இருந்து தாயுடன் வீட்டிற்கு சென்ற, 3 வயது சிறுவனை, தாய் கண்முன் போதை ஆசாமி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் சிராஜ், 25. இவர், சிக்கன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, சயினா என்ற மனைவியும், சமீர் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.
சமீர், புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறார். நேற்று மாலை, வழக்கம் போல் பள்ளி முடிந்து, சமீர் தாயுடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் வந்த மர்ம நபர், சமீரை தோளில் துாக்கிக்கொண்டு வேகமாக சென்றார். இதை பார்த்து பதறிய சயினா, கத்தியபடி ஓடி, குழந்தையை கொடுக்கும்படி மர்மநபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவதுாறாக பேசிய போதை ஆசாமியிடம் இருந்து, அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சயினாவிடம் ஒப்படைத்தனர். பின், போதை ஆசாமியை உதைத்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், போதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். சயினா அளித்த புகாரின்படி வழக்கு பதியப்பட்டது.
விசாரணையில், குழந்தையை கடத்த முயன்றது, புதுவண்ணாரப்பேட்டை, நாகூரார் தோட்டத்தை சேர்ந்த வேலு, 42, என்பதும், போதையில் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.