/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபால் அரையிறுதி: எஸ்.ஆர்.எம்., அணி தகுதி
/
வாலிபால் அரையிறுதி: எஸ்.ஆர்.எம்., அணி தகுதி
ADDED : டிச 24, 2025 05:25 AM

சென்னை: அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., கோட்டயம் எம்.ஜி., பஞ்சாப் லவ்லி பல்கலை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி, கோப்பை கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளன.
இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு ஆதரவில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் நடந்து வருகின்றன.
நேற்று காலை, காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் காலிறுதியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை - பாரதியார் பல்கலை அணிகள் மோதின.
துவக்கம் முதல், ஆட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்த எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 19, 25 - 18, 25 - 18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் உறுதியாக காலடி வைத்தது.
மற்றொரு ஆட்டத்தில், ஒடிஷாவின் கே.ஐ.ஐ.டி., பல்கலை, கடும் போராட்டத்துக்குப் பின், மேற்கு வங்கத்தின் அடமஸ் பல்கலை அணியை 25 - 23, 29 - 27, 21 - 25, 25 - 12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதேபோல், கோட்டயம் எம்.ஜி., பல்கலை, விறுவிறுப்பான ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலை அணியை 25 - 21, 25 - 27, 25 - 16, 26 - 24 என்ற கணக்கில் தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்னொரு பரபரப்பான மோதலில், பஞ்சாப் லவ்லி பல்கலை, ஹரியானாவின் குருக்ஷேத்ரா பல்கலை அணியை 20 - 25, 25 - 21, 25 - 22, 25 - 10, 15 - 8 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

