/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.76 லட்சத்தில் தொழிற்பயிற்சி கூடம்
/
ரூ.76 லட்சத்தில் தொழிற்பயிற்சி கூடம்
ADDED : செப் 30, 2024 12:32 AM
சென்னை, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகரித்து வருகின்றனர்.
அதேவேளையில், தொழில் சார்ந்த பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற விரும்புவோருக்கு ஏற்ப பயிற்சி வழங்க, வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 76 லட்சம் ரூபாயில், தொழிற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 4,000 சதுர அடி பரப்பு இடத்தில், 1,560 சதுர அடி பரப்பில் தொழிற்பயிற்சி கூடம் அமைகிறது.
ஒரே நேரத்தில், 200 பேர் அமரும் வகையில், பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி ஒரு மாதத்தில் துவங்கி, மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.

