/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார் கோவிலில் வேல் வாங்கும் விழா
/
குன்றத்துார் கோவிலில் வேல் வாங்கும் விழா
ADDED : அக் 27, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோவில் என்ற சிறப்பை, இக்கோவில் பெற்றுள்ளது.
இங்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை லட்சார்ச்சனை நடந்து வருகிறது. சூரபத்மனை வதம் செய்வதற் காக, குன்றத்துார் முருகன் கோவில் அமைந்துள்ள மலையில் இருந்து, அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவிலில் முருகன் எழுந்தருளி, வேல் வாங்கும் விழா, நேற்று மாலை நடந்தது.
தொடர்ந்து, இன்று மாலை 3:00 மணிக்கு, சூரசம்ஹாரம் விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவல் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

