/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக்கில் கார் மோதி இரு முதியவர்கள் பலி
/
பைக்கில் கார் மோதி இரு முதியவர்கள் பலி
ADDED : பிப் 28, 2024 12:30 AM
மாமல்லபுரம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த கருநிலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனி, 64, ரவி, 60. பழனியின் மகளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன், வடநெம்மேலி பகுதி வாலிபருடன் திருமணம் நடந்திருந்தது.
மருமகன் வீட்டில் நடந்த மறுவீடு நிகழ்விற்காக, நேற்று மாலை, ரவியுடன் 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், வடநெம்மேலி சென்றார்.
மாலை 3:00 மணிக்கு, அப்பகுதியில் சாலையின் குறுக்கில் கடந்தபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற 'இனோவா' கார், இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே பழனி பலியானார். திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவி, வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

