/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் கட்டணத்துக்கு 'டிமிக்கி' பொது இடங்களில் கொட்டும் லாரிகள்
/
கழிவுநீர் கட்டணத்துக்கு 'டிமிக்கி' பொது இடங்களில் கொட்டும் லாரிகள்
கழிவுநீர் கட்டணத்துக்கு 'டிமிக்கி' பொது இடங்களில் கொட்டும் லாரிகள்
கழிவுநீர் கட்டணத்துக்கு 'டிமிக்கி' பொது இடங்களில் கொட்டும் லாரிகள்
ADDED : மார் 03, 2024 01:33 AM

பூந்தமல்லி:பொது இடங்களில் கழிவுநீர் கொட்டும் டேங்கர் லாரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளில் கழிவு நீரை அகற்றும் டேங்கர் லாரிகள், அவற்றை சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்க வேண்டும்.
சுத்திகரிப்பு நிலையத்தில் செலுத்த வேண்டிய கட்டணம், சென்று வருவதற்கான டீசல் செலவுகளை மிச்சப்படுத்தி, கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில் பொது இடங்களில் டேங்கர் லாரிகளின் கழிவு நீர் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கழிவுநீரை பொது இடத்தில் கொட்டும் டேங்கர் லாரி ஓட்டுனர், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.