/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் சிறையில் திருநங்கையர் ரகளை
/
புழல் சிறையில் திருநங்கையர் ரகளை
ADDED : டிச 24, 2025 05:16 AM
புழல்:: எண்ணுாரை சேர்ந்த திருநங்கை அபி: பட்டுள்ளனர்.: நிர்வாக வசதிக்காக அபியை வேலுார் சிறைக்கும், சஞ்சனாவை திருச்சி சிறைக்கும் மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், வேறு சிறைக்குச் செல்ல மறுத்த திருநங்கையர் அபி, சுஜி, சஞ்சனா ஆகிய மூவரும், போலீசிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
பின், சிறை வளாகத்தில் உள்ள தொலைபேசி, கணினி இயந்திரங்கள் மற்றும் டியூப் லைட்டை உடைத்து, சிறைப் பதிவேடுகளையும் கிழித்தனர். தொடர்ந்து, தன் ஆடைகளை களைந்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மகளிர் சிறை அதிகாரி அல்லி ராணி, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருநங்கைகள் மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், இது குறித்து விசாரிக்கின்ற னர்.

