ADDED : பிப் 03, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ --- மாணவியருக்கான, என்.எம்.எம்.எஸ்., எனப்படும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு, இன்று நடக்க உள்ளது.
இதையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, வரும் 10ம் தேதி பள்ளிகள் செயல்படும்.

