/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு ஐ.ஆர்.எஸ்.,சிடம் பணம் பறித்த மூவர் கைது
/
ஓய்வு ஐ.ஆர்.எஸ்.,சிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : செப் 26, 2024 12:19 AM
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேபேந்திரன் நாராயண்கர், 60; ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. அவர், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், ஆக., 14ல் புகார் அளித்தார்.
அதன் விபரம்:
ஆக., 4ம் தேதி, என் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி வந்தது. அதில் எஸ்.பி.ஐ., யோனோ என்ற பெயரில் வந்த லிங்கை கிளிக் செய்தேன்.
அதில் கேட்கப்பட்ட என்னுடைய வங்கி கணக்கு எண், கடவுச்சொல், பான் எண் ஆகிய விபரங்களை பதிவு செய்தேன். சிறிது நேரத்தில் என் வங்கி கணக்கிலிருந்து, 2.35 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரு சவுத்திரி, 36, அவரது தம்பி பிஜூ சவுத்திரி, 31, சுரோனித் சென், 32, ஆகிய மூவரும், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூவரையும், நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய மூன்று மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.

