/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பசியில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவர் பலி
/
பசியில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவர் பலி
பசியில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவர் பலி
பசியில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவர் பலி
ADDED : அக் 02, 2024 12:14 AM
சென்னை, மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மங்ரூல் பகுதியைச் சேர்ந்தவர் சமர்கான், 35. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மானிக்கோரி, 50, சத்ய பண்டிட், 42, அசித் பண்டிட், 47, கணேஷ் மித்தா, 60, உட்பட 11 பேர் கூலி வேலை தேடி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு வந்தனர்.
வேலை கிடைக்காததால், மூன்று நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். கையில் பணம் இல்லாததால், வெறும் டீ, காபி அருந்தி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கினர்.
போதிய உணவு எடுத்துக் கொள்ளாததால், ஐந்து பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருவர் மயங்கினர். ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர்கள் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறியதும், நீர்ச்சத்து குறைந்ததும் உடல் நிலை பாதிப்புக்கு காரணம் என பரிசோதனையில் தெரியவந்தது. இதில் ஒருவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. மற்றவர்கள் உடல் நிலை தேறிவந்தனர். இதற்கிடையே, சமர்கான் என்பவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.
சமர்கானின் உடலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தன் சொந்த செலவில் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது ஊருக்கு அனுப்பிவைத்தார்.

