/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு
/
மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : பிப் 05, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.,நகர்:வியாசர்பாடி, சர்மா நகர், முதலாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜோதி, 62. இவரது கணவர் முருகேசன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஜோதி தன் வீட்டை பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் நளினி என்பவரின் வீட்டில் துாங்கியுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 10,000 ரூபாய் மற்றும் ஒரு மொபைல்போன் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், ஜோதி அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

