/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழைய வீடு இடிக்கும் பணி சுவர் இடிந்து கொத்தனார் பலி
/
பழைய வீடு இடிக்கும் பணி சுவர் இடிந்து கொத்தனார் பலி
பழைய வீடு இடிக்கும் பணி சுவர் இடிந்து கொத்தனார் பலி
பழைய வீடு இடிக்கும் பணி சுவர் இடிந்து கொத்தனார் பலி
ADDED : பிப் 14, 2024 01:00 AM

புழல், சென்னை, புழல், திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 59. இவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து, புதிதாக கட்டுவதற்கான பணி இரு தினங்களாக நடந்து வந்தது.
பழைய வீட்டை இடிக்கும் பணியை, அதே தெருவைச் சேர்ந்த கொத்தனார் சின்னசாமி, 59, என்பவர், கூலி தொழிலாளிகளுடன் செய்தார். பணிகளை நேற்று முன்தினம் மாலை சின்னசாமி பார்வையிட்டார். அப்போது, திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சின்னசாமி மயக்கமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சின்னசாமியை மீட்டனர். ஆனால், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். புகாரின் படி, புழல் போலீசார் சின்னசாமி உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.