/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திப்பாராவில் விபத்தில் சிக்கிய கார் மாயம்
/
கத்திப்பாராவில் விபத்தில் சிக்கிய கார் மாயம்
ADDED : பிப் 05, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை:மீனம்பாக்கத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி, நேற்று அதிகாலை, ஒரு 'இண்டிகா' கார் சென்றுகொண்டிருந்தது.
கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் ஏறி இறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி, தலைக்கீழாக கவிழ்ந்தது.
காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களை, வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து, காரை மீட்டு சாலையோரம் நிறுத்தினர்.
இந்நிலையில், கார் திடீரென மாயமானது. அங்கிருந்த காரை யார் எடுத்துச் சென்றனர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

