/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரிகளில் 9.17 டி.எம்.சி., கையிருப்பு கோடையில் தட்டுப்பாடுக்கு வராது!

ADDED : ஏப் 11, 2025 11:47 PM
சென்னை, ஏரிகளில், 9.17 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளதால், கோடைகால குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாகவும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாகவும், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 13.2 டி.எம்.சி.,யாகும். தற்போது இவற்றில், 9.17 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது.
அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில், 2.79, புழலில், 2.62, பூண்டியில், 2.43 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. வீராணம் ஏரியில் 0.81, தேர்வாய் கண்டிகையில், 0.37, சோழவரத்தில், 0.13 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது.
கடந்தாண்டு இதேநாளில், மொத்தமாக 7.49 டி.எம்.சி., மட்டுமே நீர் இருந்தது. போதுமான நீர் கையிருப்பில் உள்ளதால், சென்னையில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள்ளதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
***