தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

 சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

 சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி


ADDED : பிப் 16, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், 'சோலார் பேனல்' பொருத்தும் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:

தமிழக, ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'சோலார் பேனல்' எனும் சூரிய மின் பலகை பொருந்தும், தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளன.

பயிற்சிக்கு, 18 முதல் 32 வயது வரை உள்ளவர்களாகவும், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 45 நாட்கள்.

இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு, சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். பயிற்சி பெற விரும்புவோர், தாட்கோ www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us