/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்மன் கோவிலில் வெள்ளி கிரீடம் திருட்டு
/
அம்மன் கோவிலில் வெள்ளி கிரீடம் திருட்டு
ADDED : அக் 29, 2025 12:50 AM
ராயபுரம்: அம்மன் கோவிலில் வெள்ளி கிரீடத்தை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, ராயபுரம், சூரிய நாராயணன் சாலையில், ஸ்ரீசெல்லியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலை கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்த வீரபத்திரன், 35, நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பொதுமக்கள், கோவில் கதவு திறந்திருப்பதாகவும், அம்மன் தலையில் இருந்த கிரீடத்தை காணவில்லை எனவும், வீரபத்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ராயபுரம் போலீசில் 'ஸ்ரீசெல்லியம்மன் தலையில் இருந்த 400 கிராம் வெள்ளி கிரீடம் மற்றும் கோவில் உண்டியலில் இருந்த 30,000 ரூபாயை காணவில்லை' என, வீரபத்திரன் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

