/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை கடையில் நெரிசலை பயன்படுத்தி திருட்டு
/
நகை கடையில் நெரிசலை பயன்படுத்தி திருட்டு
ADDED : அக் 15, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர், தி.நகர் உஸ்மான் சாலையில், 'சரவணா எலைட் கோல்ட் ஹவுஸ்' என்ற நகை கடை உள்ளது. விஜயதசமி மற்றும் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ம் தேதி, வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் இருந்தது. வியாபாரம் முடிந்து, நகைகளை கடை ஊழியர் இரவில் சரிபார்த்தனர்.
அப்போது, 5 சவரன் செயின் மாயமானது தெரியவந்தது. உடனடியாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டத்தோடு கூட்டமாக நகை வாங்குவது போல் நடித்து மூன்று பெண்கள், 5 சவரன் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நகைக்கடை மேலாளர் சிம்சன், 37, என்பவர், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

