/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.எம்.கே., நகர் பூங்கா மேம்படுத்த எதிர்பார்ப்பு
/
ஆர்.எம்.கே., நகர் பூங்கா மேம்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 08, 2024 12:12 AM

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், பெருங்களத்துார் ஆர்.எம்.கே., நகரில் பூங்கா உள்ளது.
பெருங்களத்துார், பேரூராட்சியாக இருந்தபோது, இப்பூங்காவை சுற்றி சுவர், நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆரம்பத்தில் முறையாக பராமரித்து, பின் கண்டுகொள்ளவில்லை. இதனால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன.
தாம்பரம் மாநகராட்சியுடன், பெருங்களத்துார் இணைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும், இப்பூங்காவை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
அப்பகுதியில் உள்ள பெரிய பூங்காவான இதை சீரமைத்து, மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

