/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி இடம் அபகரிக்க முயன்ற இருவருக்கு 'காப்பு'
/
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி இடம் அபகரிக்க முயன்ற இருவருக்கு 'காப்பு'
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி இடம் அபகரிக்க முயன்ற இருவருக்கு 'காப்பு'
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி இடம் அபகரிக்க முயன்ற இருவருக்கு 'காப்பு'
ADDED : மார் 12, 2024 12:23 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வா நகரில், 1973ம் ஆண்டு வீட்டுமனை உருவாக்கப்பட்டது. அப்போது, சமூகநலக்கூடம் கட்ட, 35 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இதன் மதிப்பு, 15 கோடி ரூபாய்.
இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் வாயிலாக பட்டா வாங்கினர். இது தொடர்பான வழக்கு 30 ஆண்டுகளாக நடந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாவை ரத்து செய்து, 2002ல் மாநகராட்சி பெயரில் பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில், 'ஏசி' வசதியுடன் திருமண மண்டபம் கட்ட, தமிழக அரசு 6.97 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்கான, பூமி பூஜை கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது.
கட்டுமான இடத்தில், குப்பை, கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க, ஒப்பந்த நிறுவனம் சார்பில் சவுக்கு மரத்தால் சுற்றி வேலி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம், சவுக்கு மரக்கட்டைகளை ஜே.சி.பி., கொண்டு அகற்றி, மீண்டும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது.
சென்னை மாநகராட்சி தாசில்தார் சரோஜா, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார்.
இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெர்னாண்டோ, 82, ஜே.சி.பி., ஓட்டுனர் சாமிக்கண்ணு, 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே, ராமன், சுப்பிரமணி, விவேகானந்தன், கந்தையா, வெள்ளைத்துரை, சண்முகம், முருகன் என்பவர்கள் சேர்ந்து, 2016ம் ஆண்டு, 1 கோடி ரூபாய்க்கு இடத்தை பெர்னாண்டோ என்பவருக்கு விற்றுள்ளனர்.
பட்டா மற்றும் 1995ம் ஆண்டு வருவாய்த்துறையில் இருந்து வாங்கிய அனுபவ சான்றை வைத்து, 100 ரூபாய் பத்திரத்தில் கிரையம் எழுதி கொடுத்துள்ளனர்.
வேளச்சேரியில் வசிக்கும் இவர்கள், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் வசிப்பதாக கூறி, பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.
அரசு இடம் என தெரியாமல் அதை வாங்கிய பெர்னாண்டோ, வேறு யாரோ தனியார் ஆக்கிரமித்து வேலி போடுவதாக நினைத்து அகற்றி உள்ளார். அதிகாரி கொடுத்த புகாரில், இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

